Sunday, January 26, 2014

இனியாவது நாம் விழிக்கலாமா?

இனியாவது நாம் விழிக்கலாமா?

டந்த சிலநாட்களாக உத்தர்கண்ட் மாநிலத்தில் மழை, வெள்ளம், பல உயிர்கள் பலி என நாம் செய்திகள் தொடர்ந்து படித்து வருகின்றோம். நாம் பல வருடங்களாக இயற்கைக்கு கொடுத்ததையும், நமக்கு இப்போது இயற்கை கொடுப்பது என அனைத்துயுமே ஒரே வாரத்தில் பேசி தீர்த்து விட்டோம்.

ஆயிர கணக்கில் அங்கு மக்கள் காணாமலும், வெள்ளத்தால் அடித்தும் செல்லப்பட்டு இருக்கிறார்கள். யாத்திரைக்கு பல ஊர்களிலிருந்து அங்கு வருடாவருடம் மழை தொடங்குவதற்கு முன் வந்துசெல்வது வழக்கமாக இருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளில் யாத்திரை செல்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்திருக்கின்றது.

யாத்திரை செல்பவர்களின் வருமானம் (பொருளாதாரநிலை) உயர்ந்தது போலதான் அங்கு இருக்கும் கிராமங்களின் வளர்ச்சியும் இந்த யாத்திரிகளை நம்பி இருந்து வந்திருக்கின்றன. அங்கு இருக்கும் பழங்குடியினர்க்கு விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகின்றன, ஆனால் இன்று பெரும்பாலான கிராம மக்கள் யாத்திரீகர்களை நம்பிதான் பிழைப்பை வைத்திருந்தார்கள். உணவு, கம்பளி, குளிர்பானங்கள், கோயிலுக்கான கடைகள், குதிரையில் யாத்திரை பயணிகளை ஏற்றி செல்வது  என அவர்களுடைய வருமானம் யாத்திரை வரும் மக்களை சார்ந்து இருந்திருக்கின்றது.

மேலும், இந்த மழையால் கிராம மக்களின் அடிப்படை தேவைகளும் முற்றிலுமாக அழிந்துவிட்டன. உணவு, உடை, வீடு இதை எல்லாம் தாண்டி கிராம பெண்கள், பணம் சம்பாதிக்க சென்ற தங்களுடைய கணவர், குழந்தைகளை தொலைத்து இன்று தவித்து வருகின்றனர்.

இன்று அவர்களுக்கு கிடைத்து இலவச ரொட்டியும், தங்குவதற்கான கூடாரங்கள் எல்லாமே நிரந்தரமற்றது, அவர்கள் நாளையை நோக்கி யோசிக்க ஆரம்பிக்க வேண்டிய தருணம் தொடங்கிவிட்டது.
அவர்களுடைய தொழில் யாத்திரை வருபவர்களை சார்ந்திருக்கின்றன, இனி குறைந்தபட்சம் 3 வருடங்களுக்கு யாத்திரைக்கு அதிகமானோர் வருவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. தப்பிவந்த மக்களின் கதறலிருந்து நாம் பார்க்கலான். இன்னும் அவர்களுடைய பயம் குறைவதற்கு நாட்களாகும்.

மேலும், வருமானத்தை அதிகரிக்க அவசர அவசரமாக சாலைகள், அணைகள் மலைகளை உடைத்து நாம் மலைகளை இயல்புதன்மையை நசுக்கிவிட்டோம். அதை சீர் செய்வதற்கு நிச்சயம் நாட்கள் ஆகும்.பொதுவாகவே நாம் அனைவருமே ஒரு தொழிலை நோக்கியை நம்மை பழக்கி கொண்டு வருகின்றோம். நாளை அது இல்லை என்றால் எப்படி வாழப்போகிறோம் என்பதை யோசிக்க கூட முடியாமல் நாம் வாழ்ந்து வருகின்றோம். அதனாலேயே பெரும்பாலான நகரத்தில் இருப்போர்க்கு life skills என்பது குறைய ஆரம்பித்திருக்கின்றன.
இந்த கிராம மக்களுக்கும் அதே நிலைமைதான். கிராமத்தில், மலை அடிவாரத்தில் கணவருக்காக இன்னும் அந்த மழை நனைந்தப்படி காத்திருக்கும் பெண்கள் தங்களுடைய வாழ்க்கையை இனி எப்படி வாழப்போகிறார்கள் என்பதை காலம்தான் முடிவெடுக்க வேண்டும்.
வேலையில்லா நிலைக்கு படித்தவர்கள் ஒருபக்கம் தள்ளப்பட்டு வரும்நிலையில் , இதுபோன்ற சிறுகுடி மக்களை இது அதிக அளவில் மேன்மேலும் பாதிக்கக்கூடும். வறுமையிலிருந்து மீண்டு பொருளாதாரத்தில் முன்னேற நினைத்த மக்கள் அனைவருக்குமே இது பெரிய பின்னடைவுதான்.

நாம் நிவாரணநிதி என்று அவர்களுக்கு வழங்கினாலும் அவர்களுடைய எதிர்காலத்தை நோக்கி நகர , இயல்புநிலைக்கு அவர்கள் திரும்ப காலம் உறையாமல் அவர்களோடும், அவர்கள் கனவுகளோடும் நகரவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கின்றன


Saturday, January 18, 2014

M.V.Kamath சுதந்திர  குரலும், எழுத்தும்-

காலை பொழுது சில சமயம் வெறுப்புடனோ இல்லை சளிப்புடனோ தொடங்கும். கீரை விற்றும் வருபவருடைய பளுவைவிட எனக்கு ஏதும் வாழ்க்கையில் பெரிதாக இல்லை, ஆனாலும் சிலசமயங்களில் சளிப்பு என முகத்தை ஒட்டிக்கொள்ளும்.

இன்று அப்படியில்லை. ஞாயிறு, விடுமுறை நீண்ட நேர தூக்கம், கனவுகளை துரத்தியப்படி பொழுது ஆரம்பித்தது. தேதிகள், ஊர்கள் தான் மாறுகிறது, சம்பவங்கள் ஒரே மாதிரியாக இருக்கிறது என்று நினைத்து இ-பேப்பரை படிக்க ஆரம்பித்தேன்.


நான் 4 ஆண்டுகளுக்கு முன் கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே என்று M.V.Kamath அவர்களின்  உரையாடலை படிக்க ஆரம்பித்தேன். 92 வயதில் மிகவும் தீர்க்கமான, சமூகத்தின் மீது தன்னுடைய ஆழமான பார்வையை பதிவு செய்கிறார்.

இவருடைய புத்தகம் நான் இதழியல் படிக்கும்போது reference பயன்படுத்தும்படி கூறினார்கள். ஆனால் அவருடைய புத்தகமும் எங்களின் பெரும்பாலான இன்றைய இளைய இதழாளர்கள் பென்சில் குறியீடு புத்தகமாகவும், முக்கிய பக்கங்களை நாங்களே தேர்வு செய்து படிக்கும் நிலையில்தான் இருந்தோம்.


அவரைப் பற்றி அவ்வளவாக எங்களுக்கு சொல்லி தரப்படவில்லை. இன்று பிரபலமாக தொலைகாட்சிகளில் அரைகுறையாக கேள்விகளை அடுக்கி, judgment ஆக பேசும் நபர்களையே அறிமுகம் செய்தார்கள். அதானலோ எங்களில் பலருக்கு இவரைப் பற்றியதான புரிதல் இல்லாமலே போனது. அரைகுறையாக கற்று இதழியலில் நாங்களும் நீச்சல் பழகி வருகிறோம்.


கனவுகளை நீர்த்து போகும்படி இருக்க பலரும் தயாராகிவிட்டோம். கொஞ்சம் நாம் எங்கு செல்ல வேண்டும் என்பதை பற்றி சாதாரனமாக பேசினாலோ, கேட்டாலோ மொக்கை போடாம வேற ஏதாச்சும் பேசலாமா என்ற நிலைமை.

அறிவுரை என்ற பெயரில் பலர் பேசிவிட்டதால், தேவையானவைகளும் இன்று அறிவுரை பட்டியலில் சேர்க்கபட்டுவிட்டது. அவருடய காலத்தில் இருந்த செய்திகளை பற்றி பேசி வரும்போது நிறைய மாற்றங்கள் சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளில் நேர்ந்திருக்கின்றது என்பதை தெளிவாக உணர முடிகிறது.

பேச்சுகளுக்காகவே தலைவர்கள் பின்னால் மக்கள் சென்றனர். இன்று பேச்சுகள் ஒரு 
வெறும் பண கொள்முதல்களை, சந்தங்களையும், இலக்கணத்தையும் நோக்கி செல்கிறது. 

ஆனால் அன்று அவை உண்மையான திட்டங்களை, கனவுகளை சுமந்திருந்தது.
இன்று நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள், தொண்டர்கள் இல்லை வெறும் அடிமைகள் மட்டுமே நிறைந்திருக்கிறார்கள். எல்லாமே இன்று உலகில் தொழில் தான் பத்திரிகைகளும், 

இதழாளர் உட்பட அனைவருமே வார்த்தைகளை எண்ணி சம்பாதிக்கிறோம். உண்மைகள் மேல் கருப்பு மை தடவி, குரல்களை ஒலிக்க செய்து நாளைய இந்தியாவுக்கு இழுத்து செல்கிறோம்.


M.V.Kamath போன்றவர்களின் எழுத்துக்கள், எண்ணங்களை அறிமுகம் செய்ய எனக்கு எந்த முகாந்திரம் தேவை என்று புரியவில்லை. தகவலும் பரிணாம வளர்ச்சியை தொட்டதுள்ளது, ஆனால் அதன் பாதைகளை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது.





கேட்பரி சாக்லெட்?


1,400 ஏக்கரில் கேட்பரி சாக்லெட் நிறுவனம் ஆந்திராவில் 1000 கோடி மதிப்பீலான சாக்லெட் உற்பத்தி நிறுவனத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது. 2020 க்குள் வேலை வாய்ப்பை இது அதிகப்படுத்தும் என்பதையும் கேட்பரி நிறுவன தலைவர் ரவிந்தீர சுமரெட்டி கூறியுள்ளார்.

ஸ்ரீசிட்டி சென்னைக்கு 55 கி.மீ தொலைவில் இருக்கும் மிகப்பெரிய சிறப்பு பொருளாதார பிரிவுக்குள் இருக்கும் இடம்.



இந்தியாவின் மிகப்பெரிய சாக்லெட் ( உணவு) தயாரிப்பு நிறுவனமாக இது செயல்ப்பட்டு இருக்கும் நிறுவனத்தின் அடுத்த ஒரு வளர்ச்சியாக இருக்கும். மேலும், இன்றைய தேவையை மனதில் வைத்து மிகப்பெரிய, பிரம்மாண்ட தொழிற்சாலையாக அமையும்.

ஆனால் இதுபோன்ற நிறுவனங்கள் இந்தியாவில் வாழும் குறைந்த விழுக்காடுகளை மக்களை நோக்கியே செயல்பட்டு வருகின்றது. 1,400 ஏக்கர் நிலம் என்பது மிகப்பெரிய விவாசாய நிலமாக இருந்திருக்கும்.



M.S. Swaminathan ஆய்வு நிறுவனத்தின் விழா ஒன்றில் பேசிய நாட்டின் ஜனாதிபதி, ஆய்வாளர்கள் உட்பட அனைவருமே உணவு பாதுகாப்பு மசோதாவை பற்றிய விளக்கங்களையும், இந்தியாவின் உணவு தேவையை சமன் செய்ய விவாசாயத்தின் தேவையையும் கூறினார்கள்.


நிலங்கள் எல்லாம் பெரிய நிறுவனங்களுக்கும், குறைந்த விழுக்காடு அதாவது வறுமை கோட்டுக்கு பல மைல் தூரம் தள்ளி நிற்பவர்களின் தேவையை நோக்கி அரசாங்கம் செயல்பட்டு வருகின்றன.

உணவு பாதுகாப்பு மசோதா எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு நிலங்களும், உணவு உறபத்தியும் நம் நாட்டிற்கு தேவை.


இந்த தொழிற்சாலை 1000 கோடி முதலீடு செய்கிறது, நாளை அங்கிருந்து வெளியேற்றபடும் கழிவுகளால் நீருக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும். இந்தியாவில் பல சிறிய ஆறுகள், நதிகள் மழைக்காலம் தவிர மற்ற சமயத்தில் வெறும் நிலங்களாக மட்டுமே இருந்து வருகிறது.


இதை எல்லாம் நாம் கண்டுக்கொள்ளாமல் இன்றையை தேவைகளையும், லாபம் தரும் விழுக்காடு மக்கள் பின்னாலேயே செல்கிறோம். 2020 க்குள் இளைஞர்கள் பலருக்கு அங்கு பல வேலைகள் கிடைக்கலாம், ஆனால் விவாசாயிகளை நாம் இன்னும் கீழே இறக்கிவிட்டு நாம் படிகளில் ஏறுவது போல இருக்கும்.