M.V.Kamath சுதந்திர குரலும், எழுத்தும்-
காலை
பொழுது சில சமயம் வெறுப்புடனோ இல்லை சளிப்புடனோ தொடங்கும். கீரை விற்றும் வருபவருடைய
பளுவைவிட எனக்கு ஏதும் வாழ்க்கையில் பெரிதாக இல்லை, ஆனாலும் சிலசமயங்களில் சளிப்பு
என முகத்தை ஒட்டிக்கொள்ளும்.
இன்று
அப்படியில்லை. ஞாயிறு, விடுமுறை நீண்ட நேர தூக்கம், கனவுகளை துரத்தியப்படி பொழுது ஆரம்பித்தது.
தேதிகள், ஊர்கள் தான் மாறுகிறது, சம்பவங்கள் ஒரே மாதிரியாக இருக்கிறது என்று நினைத்து
இ-பேப்பரை படிக்க ஆரம்பித்தேன்.
நான்
4 ஆண்டுகளுக்கு முன் கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே என்று M.V.Kamath அவர்களின் உரையாடலை படிக்க ஆரம்பித்தேன். 92 வயதில் மிகவும்
தீர்க்கமான, சமூகத்தின் மீது தன்னுடைய ஆழமான பார்வையை பதிவு செய்கிறார்.
இவருடைய
புத்தகம் நான் இதழியல் படிக்கும்போது reference பயன்படுத்தும்படி கூறினார்கள். ஆனால்
அவருடைய புத்தகமும் எங்களின் பெரும்பாலான இன்றைய இளைய இதழாளர்கள் பென்சில் குறியீடு
புத்தகமாகவும், முக்கிய பக்கங்களை நாங்களே தேர்வு செய்து படிக்கும் நிலையில்தான் இருந்தோம்.
அவரைப்
பற்றி அவ்வளவாக எங்களுக்கு சொல்லி தரப்படவில்லை. இன்று பிரபலமாக தொலைகாட்சிகளில் அரைகுறையாக
கேள்விகளை அடுக்கி, judgment ஆக பேசும் நபர்களையே அறிமுகம் செய்தார்கள். அதானலோ எங்களில்
பலருக்கு இவரைப் பற்றியதான புரிதல் இல்லாமலே போனது. அரைகுறையாக கற்று இதழியலில் நாங்களும்
நீச்சல் பழகி வருகிறோம்.
கனவுகளை
நீர்த்து போகும்படி இருக்க பலரும் தயாராகிவிட்டோம். கொஞ்சம் நாம் எங்கு செல்ல வேண்டும்
என்பதை பற்றி சாதாரனமாக பேசினாலோ, கேட்டாலோ மொக்கை போடாம வேற ஏதாச்சும் பேசலாமா என்ற
நிலைமை.
அறிவுரை
என்ற பெயரில் பலர் பேசிவிட்டதால், தேவையானவைகளும் இன்று அறிவுரை பட்டியலில் சேர்க்கபட்டுவிட்டது.
அவருடய காலத்தில் இருந்த செய்திகளை பற்றி பேசி வரும்போது நிறைய மாற்றங்கள் சுதந்திரம்
அடைந்து 65 ஆண்டுகளில் நேர்ந்திருக்கின்றது என்பதை தெளிவாக உணர முடிகிறது.
பேச்சுகளுக்காகவே
தலைவர்கள் பின்னால் மக்கள் சென்றனர். இன்று பேச்சுகள் ஒரு
வெறும் பண கொள்முதல்களை,
சந்தங்களையும், இலக்கணத்தையும் நோக்கி செல்கிறது.
ஆனால் அன்று அவை உண்மையான திட்டங்களை,
கனவுகளை சுமந்திருந்தது.
இன்று
நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள், தொண்டர்கள் இல்லை வெறும் அடிமைகள் மட்டுமே நிறைந்திருக்கிறார்கள்.
எல்லாமே இன்று உலகில் தொழில் தான் பத்திரிகைகளும்,
இதழாளர் உட்பட அனைவருமே வார்த்தைகளை
எண்ணி சம்பாதிக்கிறோம். உண்மைகள் மேல் கருப்பு மை தடவி, குரல்களை ஒலிக்க செய்து நாளைய
இந்தியாவுக்கு இழுத்து செல்கிறோம்.
M.V.Kamath
போன்றவர்களின் எழுத்துக்கள், எண்ணங்களை அறிமுகம் செய்ய எனக்கு எந்த முகாந்திரம் தேவை
என்று புரியவில்லை. தகவலும் பரிணாம வளர்ச்சியை தொட்டதுள்ளது, ஆனால் அதன் பாதைகளை கடந்து
சென்றுக்கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment