Sunday, January 26, 2014

இனியாவது நாம் விழிக்கலாமா?

இனியாவது நாம் விழிக்கலாமா?

டந்த சிலநாட்களாக உத்தர்கண்ட் மாநிலத்தில் மழை, வெள்ளம், பல உயிர்கள் பலி என நாம் செய்திகள் தொடர்ந்து படித்து வருகின்றோம். நாம் பல வருடங்களாக இயற்கைக்கு கொடுத்ததையும், நமக்கு இப்போது இயற்கை கொடுப்பது என அனைத்துயுமே ஒரே வாரத்தில் பேசி தீர்த்து விட்டோம்.

ஆயிர கணக்கில் அங்கு மக்கள் காணாமலும், வெள்ளத்தால் அடித்தும் செல்லப்பட்டு இருக்கிறார்கள். யாத்திரைக்கு பல ஊர்களிலிருந்து அங்கு வருடாவருடம் மழை தொடங்குவதற்கு முன் வந்துசெல்வது வழக்கமாக இருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளில் யாத்திரை செல்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்திருக்கின்றது.

யாத்திரை செல்பவர்களின் வருமானம் (பொருளாதாரநிலை) உயர்ந்தது போலதான் அங்கு இருக்கும் கிராமங்களின் வளர்ச்சியும் இந்த யாத்திரிகளை நம்பி இருந்து வந்திருக்கின்றன. அங்கு இருக்கும் பழங்குடியினர்க்கு விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகின்றன, ஆனால் இன்று பெரும்பாலான கிராம மக்கள் யாத்திரீகர்களை நம்பிதான் பிழைப்பை வைத்திருந்தார்கள். உணவு, கம்பளி, குளிர்பானங்கள், கோயிலுக்கான கடைகள், குதிரையில் யாத்திரை பயணிகளை ஏற்றி செல்வது  என அவர்களுடைய வருமானம் யாத்திரை வரும் மக்களை சார்ந்து இருந்திருக்கின்றது.

மேலும், இந்த மழையால் கிராம மக்களின் அடிப்படை தேவைகளும் முற்றிலுமாக அழிந்துவிட்டன. உணவு, உடை, வீடு இதை எல்லாம் தாண்டி கிராம பெண்கள், பணம் சம்பாதிக்க சென்ற தங்களுடைய கணவர், குழந்தைகளை தொலைத்து இன்று தவித்து வருகின்றனர்.

இன்று அவர்களுக்கு கிடைத்து இலவச ரொட்டியும், தங்குவதற்கான கூடாரங்கள் எல்லாமே நிரந்தரமற்றது, அவர்கள் நாளையை நோக்கி யோசிக்க ஆரம்பிக்க வேண்டிய தருணம் தொடங்கிவிட்டது.
அவர்களுடைய தொழில் யாத்திரை வருபவர்களை சார்ந்திருக்கின்றன, இனி குறைந்தபட்சம் 3 வருடங்களுக்கு யாத்திரைக்கு அதிகமானோர் வருவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. தப்பிவந்த மக்களின் கதறலிருந்து நாம் பார்க்கலான். இன்னும் அவர்களுடைய பயம் குறைவதற்கு நாட்களாகும்.

மேலும், வருமானத்தை அதிகரிக்க அவசர அவசரமாக சாலைகள், அணைகள் மலைகளை உடைத்து நாம் மலைகளை இயல்புதன்மையை நசுக்கிவிட்டோம். அதை சீர் செய்வதற்கு நிச்சயம் நாட்கள் ஆகும்.பொதுவாகவே நாம் அனைவருமே ஒரு தொழிலை நோக்கியை நம்மை பழக்கி கொண்டு வருகின்றோம். நாளை அது இல்லை என்றால் எப்படி வாழப்போகிறோம் என்பதை யோசிக்க கூட முடியாமல் நாம் வாழ்ந்து வருகின்றோம். அதனாலேயே பெரும்பாலான நகரத்தில் இருப்போர்க்கு life skills என்பது குறைய ஆரம்பித்திருக்கின்றன.
இந்த கிராம மக்களுக்கும் அதே நிலைமைதான். கிராமத்தில், மலை அடிவாரத்தில் கணவருக்காக இன்னும் அந்த மழை நனைந்தப்படி காத்திருக்கும் பெண்கள் தங்களுடைய வாழ்க்கையை இனி எப்படி வாழப்போகிறார்கள் என்பதை காலம்தான் முடிவெடுக்க வேண்டும்.
வேலையில்லா நிலைக்கு படித்தவர்கள் ஒருபக்கம் தள்ளப்பட்டு வரும்நிலையில் , இதுபோன்ற சிறுகுடி மக்களை இது அதிக அளவில் மேன்மேலும் பாதிக்கக்கூடும். வறுமையிலிருந்து மீண்டு பொருளாதாரத்தில் முன்னேற நினைத்த மக்கள் அனைவருக்குமே இது பெரிய பின்னடைவுதான்.

நாம் நிவாரணநிதி என்று அவர்களுக்கு வழங்கினாலும் அவர்களுடைய எதிர்காலத்தை நோக்கி நகர , இயல்புநிலைக்கு அவர்கள் திரும்ப காலம் உறையாமல் அவர்களோடும், அவர்கள் கனவுகளோடும் நகரவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கின்றன


No comments:

Post a Comment